Monday, November 02, 2009

ஜூரம், கதை, கனவு

"சம்பத், இனிமேல் லெட்டர் எல்லாம் எழுதாதீங்க. நீங்க எழுதும் கடிதங்களை நான் என்ன செய்யறேன்னு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவீங்க."

சம்பத் ரயிலின் ஜன்னல் வழியே வெறித்தான். கரண்ட் கம்பம், கரண்ட் கம்பம், கரண்ட் கம்பம். சடாரென அடுத்த ஸ்டேஷனில் இறங்கி நடந்தான். இருள். பாதை மறைந்தது. தூரத்தில் பந்தங்கள். பல்லக்கின் ஹே, ஹோ. பல்லக்கில் இருந்த அழகியைப் பார்த்தான்.

"இளவரசி"
"யார் நீங்கள்?"
"........ம்....... என்ன?"
"என்ன உங்களுக்கும் காதில் இடக்கரடக்கலா? யார் நீங்கள்"
"வேறு ஒரு கதையில் நிராகரிக்கப் பட்டவன்"
"வாங்களேன், பல்லக்கில் போகலாம்"

அவள் கைகள் அவன் தோள் மீது பாவின. அவள் கூந்தல் அவன் கழுத்திலும் முதுகிலும் படர்ந்து, முன் பக்கம் வரை பரவியது. முத்தமிட அணுகினாள்.

~~~~~~~~~

யட்சி ஒரு வகை பேய். பார்க்க அழகான பெண் மாதிரி இருக்கும். அழகுன்னா அழகு அத்தனை அழகு, + ரெண்டு வீரப்பற்கள். வயது வந்த ஆண்களைக் கவர்ந்து தின்னும்.

தெற்கே நிறைய யட்சி கோவில் இருக்காம். இதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

"அது வேண்டா விடுடே. பொட்டப்புள்ள வாயில யட்சி பிரசாதம் வெச்சி அது பின்னால நம்ம ஆத்தாள வண்டீல உக்காரவெச்சி தலைய விரிச்சிக்கிட்டு கண்ணுல நெருப்பக் கக்கீட்டுப் போகவா?!" என்றார். விட்டுவிட்டேன்.

அவரே, "சரி வா, நல்லதா எதாவது இங்கிலீஷ் படம் எடுத்துட்டு வந்து பாக்கலாம்"ன்னார்.
"MRP Rs. 399/- ன்னு போட்டு டிவிடி கிடைக்கும், இந்திய சென்சார் போர்ட் சர்ட்டிபிகேட்டோட. தப்புப் பண்ணாத காதலர்கள், கெட்ட வார்த்தை பேசாத டாரண்டினோவின் ரவுடிக் கும்பல்... அதானே, ஓ பார்ப்போமே"

~~~~~

பீத்தோவனின் ஆறாவது சிம்பொனியை ஓடவிட்டுவிட்டுப் படுத்தேன். இரண்டாவது மூவ்மெண்ட் வருவதற்குள் தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. ஆ! அந்த இரண்டாவது மூவ்மெண்ட்! கிராமத்தில் மண் பாதையில் மாட்டுவண்டியில் போகும் சுகம். வண்டி அசைந்து அசைந்து செல்கிறது. மாட்டு வண்டியென்றா சொன்னேன்? படகு! ஆற்றில் அசைந்து அசைந்து என்னைத் தாலாட்டுகிறது.

"ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ..."
என்று கம்பன் பாட்டு போல அசைந்து அசைந்து, ஆறு கடந்து கடலில் போய் நிற்கிறது.

கடல். கப்பல். கப்பலில் வந்தியத்தேவன், கடும் சுரத்தில் புலம்புகிறான்.. புலம்புகிறேன். "மஞ்சள் அழகி! மஞ்சள் அழகி!" உமா தர்மன் மஞ்சள் உடை அணிந்து பவ்யமாக அமர்ந்திருக்கிறாள். அவளெதிரில் ஒரு ஜப்பானியன் புதிதாக வார்த்தெடுத்த வாளை ஏந்தியிருக்கிறான்.

"I can tell you with no ego, this is my finest sword. If on your journey, you should encounter God, God will be cut. Now, Yellow haired Warrier!, Go!"

மஞ்சள் அழகி வாளுடன் தயாராகிறாள். And she's been aching for some practice. She guides my glance upwards to the pixie perched on the roof's edge. Deadly little Miho.

~~~~

அரக்கர்கள் ஏதேதோ கதவுகளைத் திறந்து திறந்து உலகிற்குள் வருவதும் போவதுமாய் இருந்தனர். விலங்குகள் உருகும் பனி மலையை விட்டு விலகி வெகுதூரம் சென்றுகொண்டிருந்தன. போக்கிரிகள் சோற்றைப் பற்றியும் வக்கிரமான பாடல்கள் பற்றியும் பேசிக்கொண்டே குற்றம்புரியத் தயார் ஆகிக் கொண்டிருந்தனர். பல நாயகர்கள் அழகிய பெண்களையும் தொட்டில் குழந்தைகளையும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய வண்ணம் இருந்தனர்.

ஒரு கிழவர் புலம்பிய வண்ணம் கடந்து செல்கிறார், "இந்த உலகம் தன் கதை சொல்பவனை இழந்து விட்டால் இனி இந்தக் குழந்தைகளுக்குக் கதை சொல்வது யார்?!"


ஆனந்த்,
மே 16, 2009

Monday, October 05, 2009

என் இசை - myband.co.inல்

http://www.myband.co.in/ananth/

Sellaband, Jamendo, இவற்றுக்குப் பிறகு, புதிய தளம் myband.co.inல் ஒரு profile உருவாக்கி என் இசையையும் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். இதுபோன்ற தளங்கள் சில சமயங்களில் புதிய உத்வேகத்தை அளிக்கின்றன, பல சமயங்களில் ஒரு அயற்சியை உண்டு பண்ணுகின்றன.

myband.co.in ஒரு இந்திய முயற்சி. நம்மூர் ஆட்களுக்கு என் போன்றவர்களின் இசை போய்ச்சேர இது வழிவகுக்கலாம்.

Wednesday, September 09, 2009

இன்னும் சில அடிகளில்
மலையுச்சி

இன்னும் சில நொடிகளில் நான்
அதோ, அந்த உயரத்தில்
இல்லை இதோ,
இந்தப் பள்ளத்தில்.

ஆனந்த்
செப் 9, 2009

உச்சி வெய்யிலில்
மரநிழலில் கயிற்றுக்கட்டிலில்
ஒரு கதையை சுவைக்கலாமென்று அமர்ந்தேன்

ஒரு ராட்சசக் கழுகு
என் கதையைக் கவ்விக்கொண்டு சென்றது.

தூரத்தில்
விக்கிரமாதித்தர்கள் ஏறத் தயங்கும்
ஒரு மலையுச்சியில்
கடிகாரத்தின் பற்களுக்கிடையில்
என் கதை நசுங்கிக் கொண்டிருக்கிறது.

மலைமீதினின்றும் ஒழுகுகிறது,
கதைகளைத் தின்னும் ஒரு கதை.

ஆனந்த்
செப் 8, 2009

Wednesday, August 05, 2009

Beethoven in Mozart's Shadow?

I'm just back from a presentation, Western Music Appreciation: Mozart, by Dr. Daphne de Rebello at Hyderabad Western Music Forum. http://www.hydmusic.com/?q=node/104

I kind of stopped listening to western classical music these days. I thought this session is a good idea to come back to Mozart again. So I went ahead attended the presentation.

It was a good presentation. Dr. Rebello chose a fine set of compositions ranging from Mozy's early piano works to his Chamber, Orchestral, Operatic works. Some of them were new to me. Besides, they played a couple of scenes from Amadeus (Too many notes! LOL!). An evening well spent.

It is an introduction to classical music and Mozart stuff. One should expect to hear some fairy tale about the composer, him being the one and only Mozart. Surprisingly Dr. Rebello kept that part to a minimum, but she took me by surprise when she said (even) Beethoven composed under the shadow of Mozart, that he was like a deciple of Mozart.

I know Beethoven and Mozart met once in their lifetime, and Beethoven was about to learn music from the genius. Unfortunately he had to return to his hometown because his mother died or something like that. When he came back (to Vienna?), Mozart had already died. Everyone knows that Haydn is like a guru to Mozart. Infact Beethoven took some lessons from Hayden, unfortunately that didn't work out either.

Ofcourse Dr. Rebello didn't mean Beethoven took daily lessons from Mozy. But I still couldn't accept when someone says Beethoven composed under the shadow of Mozart. What I love about Beethoven's music is that it's so not like Mozart's. It's true that Beethoven should have had a great respect for Mozart, but it's very hard connect them both music wise.

To compare their music is like comparing that of Ilayaraja's and Rahman's. Ilayaraja is an absolute genius, just like Mozart, and his music flows naturally and flawlessly, just as Mozart's. These two guys attained a kind of flow unparalled by anyone in the past few centuries. Of course Haydn's music had a similar flow, but what it lacks is the magic that's present in Mozart's. There are so many pieces of Mozart and Ilayaraja, where you can't just imagine how the composer could have arrived at the piece. They are just Geniuses! that's it.

On the other hand, you can't label Beethoven or Rahman as Geniuses. Some do, but they aren't. One reason, calling either of them a Genius insults the hard work they put on every work. They carve their every single note and shape up the piece. Nothing just falls off from the sky for them. Hence the flow is not so silky, and their music needs repeated listenings to understand and appreciate.

I think I have reasonable basis on which I make these statements. Mozart is known for his neatly written out first-copy original scores ("He never makes copies" - Amadeus. There are more proofs for this). On the other hand Beethoven's score looks messy with all kinds of corrections, re written parts etc.

Same with Raja and Rahman. Raja is known for his lightening speed in composing. There are times when he has done score and songs for an entire film in a single day. He usually composes in front of all the musicians in the studio. His score looks just as neat as that of Mozy's.

Rahman's composition process is rather slow, thanks to his infamous 3 month cycle per project. I guess he's changed a bit of late, but still... Rahman is known for his hard work, his thouroughly worked out phrases, his strict adherence to perfection and his unity and variety in every single project. When he was new, they used to say he copies from Ilayaraja. Now everyone knows that's not true.

Coming back to Beethoven, there are anecdotes about him having a copy of Bach's Well tempered clavier, that he studied carefully. Boroque influence is well pronounced in Beethoven's music than in Mozart's. But somehow I fail to see any connection between Mozart and Beethoven's music, that one could say "Beethoven composed under the shadows of Mozart".

Anyways, that was an interesting presentation, it served its purpose well; a good introduction to Mozart and western classical music. Anyone interested in western music should keep an eye out for Hyderabad Western Music Forum. But I wish the community matures bit fast and gets ready for serious concerts and discussions. I'm kind of tired of "Introduction to"s and "Greatest Hits".